Loading . . .




கும்பகோணம் நீதிமன்றத்தில் காலை 10 மணி அளவில் தேசிய மக்கள் நீதிமன்றம்(குறிப்பிடப்பட்ட வழக்குகள்) நடைபெற்றது

The Forecast 3 years ago தஞ்சாவூர்

தேசிய சட்டப் பணிகள் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் வழிகாட்டுதல் மற்றும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் செயலாளர் அவர்களின் அறிவுரையின்படி , கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் திருமதி ஷண்முகப்பிரியா அவர்களின் வழிகாட்டுதலின்படி 11.03.2023 அன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் காலை 10 மணி அளவில் தேசிய மக்கள் நீதிமன்றம்(குறிப்பிடப்பட்ட வழக்குகள்) நடைபெற்றது இதில் ஒரு அமர்வு ஏற்படுத்தப்பட்டது அதில் திரு சிவசக்திவேல் கண்ணன் கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி,திரு புவியரசு மாவட்ட உரிமையியல் நீதிபதி, திரு பாரதிதாசன் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எண் 1 இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதில் வாகன விபத்து 10 வழக்குகளில் ரூபாய் 15 லட்சத்து 58 ஆயிரத்து 900 க்கு தீர்வு காணப்பட்டது,  ஒரு விவாகரத்து வழக்கு சுமூகமாக பேசி தீர்வு காணப்பட்டது 2 காசோலை வழக்குகள் முடிக்கப்பட்டு அதில் 2 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது மற்றும் ஒரு பணம் மீட்பு வழக்கில் ரூபாய் ஒரு லட்சத்து எழுபத்தி ஓராயிரம் தீர்வு  காணப்பட்டது . இந்த அமர்வானது 15 வழக்குகளில் 23 லட்சத்து 98 ஆயிரத்து 900 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது . இதனை வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் m. சுதர்சனன் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

0 Comments

Post your comment here

தஞ்சாவூர் Relateted News