தமிழகத்தில் விரிவடையும்
ஜியோ 5ஜி சேவை!
ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தனது நெட்வொர்க்கின் கீழ் 11 நகரங்களை இணைப்பதன் மூலம் அதன் 5G சேவையை தமிழகத்தில் விரிவுபடுத்தியுள்ளது. இதனையடுத்து அதன் 5ஜி சேவையானது நாடு முழுவதும்
184 நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, தூத்துக்குடி மற்றும்
புதுச்சேரியில் 5ஜி சேவையை
அறிமுகப்படுத்திய முதல் ஆபரேட்டராக ரிலையன்ஸ் ஜியோ திகழ்கிறது.
ஜனவரி 11 அன்று, ரிலையன்ஸ் ஜியோ
இன்ஃபோகாம் தமிழகத்தில் தனது 5ஜி சேவையை முதலில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர்
மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்த ரூ.40,446 கோடி முதலீடு
செய்துள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50 கூடுதல் நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை
அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்
நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர். அதே வேளையில், மேலே குறிப்பிட்ட நகரங்களில் உள்ள ஜியோ பயனர்கள் ஜியோ வெல்கம் ஆஃபருக்கு
அழைக்கப்படுவார்கள், இதன் மூலம் 1ஜிபிபிஎஸ் பிளஸ் வேகத்தில் வரம்பற்ற
டேட்டாவை எந்த கூடுதல் கட்டணமும் இன்றி அனுபவிக்க முடியும்.
0 Comments