Loading . . .




மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்,

The Forecast 3 years ago தமிழ்நாடு

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்  (3.2.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும்

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள், மருத்துவப் பணியாளர் தேர்வு

வாரியத்தால் 177 இருட்டறை உதவியாளர்கள் மற்றும் 19 ஆய்வக நுட்புநர் நிலை-II பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு

பணி நியமன ஆணைகள், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் 21 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்,

என மொத்தம் 787 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 ஒப்பந்த செவிலியர்கள், 5 இருட்டறை

உதவியாளர்கள், 3 ஆய்வக நுட்புநர் நிலை-II மற்றும் 4 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும்

மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., மருத்துவத் தேர்வு வாரியத் தலைவர்

திரு ஏ.ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம்,

மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் ஹரிசுந்தரி மற்றும் அரசு

உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News