Loading . . .




இந்தியாவில் இணைய பயன்பாடு: 10 ஆண்டுகளில் பெரிய உயர்வு

Janani G 18 hours ago தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இணையப் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளதாக Our World in Data வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த ஆய்வின் படி, ஒரு தசாப்தத்திற்கு முன்பு சுமார் 15 சதவீதமாக இருந்த இணையப் பயன்பாடு தற்போது 70 சதவீதத்திற்கு அருகில் உயர்ந்துள்ளது. குறிப்பாக 2018ஆம் ஆண்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு மட்டுமே இணைய வசதி இருந்த நிலையில், தற்போது 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்த வளர்ச்சி, ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்தது, இணைய வசதி பரவலாக கிடைத்தது மற்றும் டிஜிட்டல் சேவைகள் விரிவடைந்தது போன்ற காரணங்களால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தொடர்பு, கல்வி மற்றும் பல ஆன்லைன் சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்க தொடங்கியுள்ளது.

இணைய பயன்பாட்டின் இந்த உயர்வு, நாட்டின் டிஜிட்டல் முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது.

இந்த மாற்றம், நாளந்தோறும் வாழ்க்கையில் இணையத்தின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதை காட்டுகிறது.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News