தொல்காப்பியப் பூங்காவினை மறுமேம்பாடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம்
The Forecast 3 years ago தமிழ்நாடு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் (7.2.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள தொல்காப்பியப் பூங்காவினை மறுமேம்பாடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,
உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மரு. சீ. ஸ்வர்ணா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments