13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்- குடியரசுத்தலைவர் உத்தரவு
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி மும்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: * மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். * ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம். * அருணாச்சலப் பிரதேசம் மாநில ஆளுநராக திரிவிக்ராம் பர்னாயக் நியமனம். * சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யா நியமனம். * இமாச்சலப்பிரதேச ஆளுநராக பிரதாப் சுக்லா நியமனம். * அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா நியமனம். * ஆந்திர மாநில ஆளுநராக அப்துல் நசீர் நியமனம். * சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன் நியமனம். * மணிப்பூர் மாநில ஆளுநராக அனுசுயா நியமனம். * மேகாலயா மாநில ஆளுநராக பகு சவுகான் நியமனம். * பீகார் மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் நியமனம். * மகாராஷ்டிரா மாநில ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமனம். * லடாக் மாநில ஆளுநராக மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
0 Comments