Loading . . .




குறுகிய கால இலவச திறன் பயிற்சி திட்டங்கள், சங்கல்ப் திட்டம், ஒன்றிய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்காக நடைபெறவிருக்கும் இலவச திறன் பயிற்சிகள் ஆய்வு

The Forecast 3 years ago விளையாட்டு மேம்பாட்டு துறை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட "நான் முதல்வன்”

திட்டம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு

வரும் குறுகிய கால இலவச திறன் பயிற்சி திட்டங்கள், சங்கல்ப் திட்டம், ஒன்றிய

அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்காக நடைபெறவிருக்கும் இலவச திறன் பயிற்சிகள் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

 உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  (17.02.2023) ஆய்வு செய்தார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன்

மேம்பாட்டிற்கான "நான் முதல்வன்" திட்டம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்

கழகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் குறுகிய கால இலவச திறன் பயிற்சி திட்டங்கள்,

சங்கல்ப் திட்டம், ஒன்றிய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்காக நடைபெறவிருக்கும்

இலவச திறன் பயிற்சிகள் ஆகியவற்றை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச்

செயலகத்தில்  (17.02.2023) காலை ஆய்வு செய்தார்.

"நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும்

பட்டதாரி இளைஞர்களுக்கு நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற

வேலைவாய்ப்பினை பெறும் வகையில் முன்னணி தொழில் நிறுவனங்களால் தற்பொழுது

பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கென தொடங்கப்பட்ட www.naanmudhalvan.tn.gov.in

என்ற இணையதளத்தில் இலவச படிப்புகள். குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள்

மற்றும் பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான "நான் முதல்வன்"

திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் 3,50,000 மாணவர்களுக்கு நவீன

தொழில்நுட்பங்களில் திறன் பயிற்சி வகுப்புகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை

கண்காணிக்கவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 15 இலட்சம் மாணவர்களுக்கான

வேலைவாய்ப்புக்குரிய திறன் பயிற்சிகளை மாணவ சமுதாயத்திற்கு பலன் அளிக்கும்

விதமாக மேலும் மேம்படுத்தவும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும், குறுகிய கால பயிற்சி நிறுவனங்களை ஆய்வு செய்து தரமான பயிற்சிகள்

வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறும், சிறப்புத் திட்டங்கள் மற்றும் பிற

துறைகளைச் சார்ந்த திறன் பயிற்சிகளை முன்னணி நிறுவனங்களோடு இணைந்து

வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அமைத்திட

வேண்டுமென்றும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை

இயக்குநர் திருமதி ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக அலுவலர்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலர்கள் ஆகியோர்

கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

விளையாட்டு மேம்பாட்டு துறை Relateted News