Loading . . .




உ.பி. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது- எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில் உரையாற்றிய ஆளுநர்

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், தனது உரையை வாசிக்கத் தொடங்கியதும் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். ஆளுநரே திரும்பி போ என கோஷமிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது. இந்த அமளிக்கு மத்தியிலும் உரையாற்றிய ஆளுநர், நல்லாட்சி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிப் பாதையில் மாநில அரசு சென்று கொண்டிருப்பதாகவும், குற்றம் மற்றும் ஊழலுக்கு எதிராக சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையுடன் அமைதி மற்றும் நல்லிணக்க சூழல் உறுதி செய்யப்படுகிறது என்றும் கூறினார்.


சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அவரது உரையில், மாநில அரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டதுடன், சமீபத்தில் லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு குறித்தும் பேசினார். அவரது உரையை ஆளும் பாஜக உறுப்பினர்கள் வரவேற்றனர். ஆர்எல்டி, காங்கிரஸ், பிஎஸ்பி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பு, அனைவருக்கும் சம உரிமை தொடர்பான பதாகைகளை எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஏந்தியிருந்தனர். முன்னதாக விவசாயிகள் பிரச்சனை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் அப்புறப்படுத்த முயன்றபோது காவலர்களுக்கும் புகைப்பட கலைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சமாஜ்வாடி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News