மீண்டும் மணிப்பூரில் நிலநடுக்கம் மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் அருகே
பூமிக்கு அடியில் 10 கி.மீ தொலைவில், 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது சுமார் மாலை 5.49 மணியளவில்
ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 2 வாரத்துக்கு முன் 4 ரிக்டர் அளவில் மணிப்பூரில் நிலநடுக்கம் பதிவானது. இந்தியாவில் மேற்கு, கிழக்கு எனஇருபக்கமும் மாறிமாறி நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது. ஆனால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
0 Comments