விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம்
The Forecast 3 years ago விளையாட்டு மேம்பாட்டு துறை
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இரண்டாவது நாளாக 21.02.2023 அன்று தீவிர வாக்கு சேகரிப்பு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் . ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரித்து இரண்டாவது நாளாக 21.02.2023 அன்று திறந்த வாகனத்தில் தீவிர பிரச்சாரம் செய்தார்.
ஈரோடு மாவட்ட கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனை, சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி ரோடு அர்ஜுனா ஸ்வீட்ஸ் நிலையம், கிராமடை , புதுப்பாலம், மணல் மேடு, பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோடு, அண்ணா டெக்ஸ் மேடு (ஆலமரத்து தெரு-சமாதானம்மாள் சத்திரம்), பேபி மருத்துவமனை, மரப்பாலம், மண்டபம் வீதி, ராகவேந்தர் கோவில், காமாட்சி காடு, அய்யனாரப்பன் கோவில் வீதி, ராயல் ஸ்டேஜ், இந்திரா நகர், கற்பகம் லே அவுட், காவேரி ரோடு, கருங்கல் பாளையம், காந்தி சிலை ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்த போது பேசியதாவது:-
2024-நாடாளுமன்ற தேர்தலிலுக்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அண்ணன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
கொடநாடு கொலை - கொள்ளை , தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு , வேளாண்மை விரோத சட்ட ஆதரவு, இது தான் எடப்பாடி அவர்கள் செய்த சாதனை. அதிமுக விட்டு சென்ற கடன் சுமையிலும் சொன்னதைச் செய்யும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தலைவர் அவர்கள் செயல்படுத்தி வருகின்ற திட்டங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்திட உங்கள் ஆதரவினைத் தாருங்கள்.
அடிமை டிரெயினிங் சென்டரான அதிமுக மற்றும் ஆளுநர் டிரெயினிங் சென்டரான பாஜகவை முழுமையாக புறக்கணித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பிரச்சாரத்தின் போது வீட்டுவசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் பொறுப்பாளர் முத்துசாமி அவர்கள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments