6 இலக்க ஹால்மார்க் அடையாள எண் இல்லாத தங்க நகை விற்பனைக்கு ஏப்ரல் 1 முதல் தடை: மத்திய அரசு அறிவிப்பு
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
தங்க நகை விற்பனை சார்ந்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல், விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களிலும் ஹால்மார்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த அடையாள எண் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
தரமான தங்க நகைகளை விற்பனை செய்யும் நோக்கில் மத்திய அரசு தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரையை அறிமுகம் செய்தது. 2021 ஜூன் மாதத்துக்குப் பிறகு ஹால்மார்க் முத்திரையைமத்திய அரசு படிப்படியாக கட்டாயமாக்கத் தொடங்கியது. முதற்கட்டமாக 256 மாவட்டங்களிலும் 2-ம் கட்டமாக 32 மாவட்டங்களிலும் என மொத்தம் 288 மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. ஹால்மார்க் முத்திரை கட்டாய மாக்கப்படாத மாவட்டங்களிலும், பெரும்பான்மையாக ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளே விற்பனைசெய்யப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசு ஹால்மார்க் முத்திரையுடன் 6 இலக்க தனித்த எண் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.
0 Comments