Loading . . .




பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் காங்கிரசில் சேருவார்கள்

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் காங்கிரசில் சேருவார்கள்

பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நஞ்சுண்டசாமி (கொள்ளேகால்), மனோகர் (விஜயாப்புரா) மற்றும் மைசூரு மாநகராட்சி முன்னாள் மேயர் புருஷோத்தம் ஆகியோர் நேற்று பெங்களூருவில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரது முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கொடியை வழங்கி கட்சியில் சேர்த்து கொண்டனர். அதன் பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். வரும் நாட்களில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள சிலரும் எங்கள் கட்சியில் சேர உள்ளனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் தற்போது யாருடைய பெயரையும் கூற மாட்டேன். பா.ஜனதாவினர் எந்த விதமான நிபந்தனையும் இன்றி காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை ஏற்று அவர்கள் கட்சியில் இணைகிறார்கள். காங்கிரசுக்கு ஆதவாக... மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களிலும், மாநில அளவிலான நிர்வாகிகள் இங்கும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. நாங்கள் முன்பு நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரியவந்தது. தற்போது நடத்திய கருத்து கணிப்பில் எங்கள் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் மாற்றம் தொடங்கியுள்ளது. நாங்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்வதால் இந்த மாற்றத்தை பார்த்து வருகிறோம். குஜராத் தேர்தல் முடிவடைந்ததும், கர்நாடகத்தில் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா தயாரானது. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேதியையும் முடிவு செய்தனர். அதன் பிறகு இந்த விஷயம் தாமதிக்கப்பட்டது. அரசுக்கு தெரிவிப்போம் இன்னும் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்தால் டெண்டர்களை விட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் பணியை செய்து வருகிறார்கள். திட்டங்களுக்கு அவசரகதியில் நிதியை விடுவித்து வருகிறார்கள். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசித்து முடிவு எடுத்து எடுக்கும். அதை மாநில அரசுக்கு தெரிவிப்போம். இன்று தேர்தல் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. தவறுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு வழங்காமல் தேர்தல் ஆணையம் உடனடியாக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். அதிகளவில் நடைபெற்று வரும் ஊழல்களை நிறுத்த வேண்டும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறுகையில், "வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் இந்துத்துவா தந்திரம் எடுபடாது. ஏனெனில் பா.ஜனதாவின் வேலைகள் பற்றி மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். இதை தெரிந்து கொண்ட பா.ஜனதா ஊழல்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை செலவழித்து வெற்றி பெற முயற்சி செய்கிறது. லஞ்ச விவகாரத்தில் மாடால் விருபாக்க்ஷப்பா எம்.எல்.ஏ.வை காப்பாற்ற ஆளும் பா.ஜனதா அரசு முயற்சி செய்கிறது. அவரை போலீசார் இதுவரை செய்யவில்லை. ஊழல் பா.ஜனதா அரசு அகற்றப்பட வேண்டும்" என்றார்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News