துணை வேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை - 29 நியமனங்களை ரத்து செய்தது கொல்கத்தா உயர் நீதிமன்றம்
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. மேலும் மேற்குவங்க அரசின் 29 துணை வேந்தர் நியமன உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார். துணை வேந்தரை நியமிப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகிக்கிறார். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த சூழலில் மேற்குவங்கத்தில் ஆட்சி நடத்தும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் 2012, 2014-ம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்களை செய்தது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அனுபம் பெரா என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
0 Comments