இந்தியாவில் முதுநிலை மருத்துவம் படிக்க புதிய நிபந்தனைகள் - ‘நீட் பி.ஜி.’க்குப் பதில் ‘நெக்ஸ்ட்’ தேர்வு
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
வெளிநாடுகளில் மருத்துவம் பயில்பவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) பல்வேறு புதிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ‘நீட் பி.ஜி.’ தேர்வுக்கு பதில் நெக்ஸ்ட் என்ற பெயரில் தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது.
வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் பயிலும் இந்திய மாணவர்கள் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகும் மருத்துவம் படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் இங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினமாக உள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தால், அங்கு வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை மாணவர்களால் செலுத்த முடியாத அளவு அதிகமாக உள்ளது. அதனால் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
எனினும், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், நாடு திரும்பியதும் நேரடியாக மருத்துவ தொழில் செய்யவோ அல்லது உயர் கல்வியில் சேரவோ முடியாது. இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) நடத்தும் ‘எப்எம்ஜிஇ’ என்ற தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்வில் அவ்வளவு சுலபமாக தேர்ச்சி பெறவும் முடியாது. எனவே, எப்எம்ஜிஇ தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இன்னும் தேர்ச்சி பெற முடியாத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
0 Comments