Loading . . .




அகில இந்திய பார் கவுன்சில்,தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை   தலைமைச் செயலகத்தில், அகில இந்திய பார் கவுன்சில்

துணைத் தலைவர் . எஸ். பிரபாகரன், தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என். மாரப்பன், துணைத்

தலைவர் திருமதி பிரிசில்லா பாண்டியன், பொதுச் செயலாளர் திரு. பி. காமராஜ், பொருளாளர் திரு. கே. முரளிபாபு, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில்

தலைவர் திரு.பி.எஸ். அமல்ராஜ், கௌரவ செயலாளர் திரு. ஆர். அய்யாவு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, வழக்கறிஞர்கள் சேம நல நிதியை 7 இலட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தியதற்காகவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிற்கு ரூ.20 கோடியை மூலதன வைப்பு தொகையாக அளித்தமைக்காகவும், சென்னையில் நீதிமன்ற கட்டடங்களை அமைக்க 7 ஏக்கர் நிலம் நிதி ஒதுக்கீடு செய்தமைக்காகவும் நன்றி தெரிவித்தனர். உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. பி. வில்சன், என்.ஆர். இளங்கோ, அரசு தலைமை வழக்கறிஞர் . ஆர். சண்முகசுந்தரம் ஆகியோர் உள்ளனர்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News