சென்னை- செய்தித்துறை அமைச்சர் . மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம்
The Forecast 4 years ago தஞ்சாவூர்
இக்கூட்டத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி குறித்து மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டார் இக்கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தனது தலைமையுரையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க தஞ்சாவூர் மண்டலத்திற்குட்பட்ட தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ளடங்கி இருக்கக் கூடிய அமைக்கப்பட்ட சிலைகள், நினைவகங்கள் மற்றும் மணிமண்டபங்கள் பராமரிப்புப் பணிகள் ஏற்கனவே குறித்தும், அதேபோல தமிழரசு இதழுக்கான சந்தாக்களை அதிகளவில் சேர்ப்பது குறித்தும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நம்முடைய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மொழிக் காவலர்கள் இவர்களுக்கான சிலைகள் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மண்டலமாக பிரிக்கப்பட்டு இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டு அதன் கீழ் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நேரில் தொடர்பு கொண்டு தமிழரசு இதழுக்கான சந்தாக்களை அதிகளவில் சேர்த்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை இந்த மாதத்திற்குள் எய்திட வேண்டும். அனைத்துத் துறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் அரசின் சாதனைகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள தமிழரசு இதழ் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்கள், சிவைகள் நல்ல முறையில் பராமரித்திட வேண்டும். நினைவகங்கள் குறித்து சாலைகளில் முன்கூட்டியே பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெயர்ப் பலகைகள் அமைக்க வேண்டும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நிகழ்ச்சிகள், விழாக்கள் தொடர்பான செய்திகள் புகைப்படங்கள் நேரலைக் காட்சிகள் மற்றும் அரசாணைகள் இவைகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களின் சமூக சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றம் செய்து பொதுமக்கள் அதிகளவில் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் பாலமாக செயல்பட்டு சிறப்பாக பணி மேற்கொள்ள வேண்டும் என செய்தித்துறை அமைச்சர் . மு.பெ.சாமிநாதன் அவர்கள் தெரிவித்தார்
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன்
காசிராஜன் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையுரையாற்றி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) தி அம்பலவாணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இக்கூட்டத்தில் கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர்கள் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments