Loading . . .




தஞ்சாவூர் திருடு போன நகைகள் மீட்பு காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டு

The Forecast 3 years ago தஞ்சாவூர்


கடந்த 22.02.2023 அன்று தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய சரகம், பூக்கார தெரு, முதல் தெருவில் மர்ம நபர்கள் பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் ஒரு வீட்டில் 28 சவரனும், மற்றொரு வீட்டில் 3 சவரனும் திருடி சென்றதாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளில் தஞ்சை மாவட்ட காவல் துறையினர் தக்க புலன் வைத்து மதுரையில் பதுங்கியிருந்த பழைய திருட்டு குற்றவாளியான வினோத் (எ) பூனைக்கன்னு வினோத் 20/23 த/பெ தவமணி, 1/144, வடக்கு தெரு, லிங்கவாடி, நத்தம், திண்டுக்கல் என்பவரை 30.03.2023 அன்று கைது செய்து களவு போன 100% நகைகள் மீட்கப்பட்டு எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இவ்வழக்கில் குற்றவாளியை கைது செய்து களவுபோன பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த தஞ்சை மாவட்ட காவல் துறையினரை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.

0 Comments

Post your comment here

தஞ்சாவூர் Relateted News