Loading . . .




ஒரு மாதம் நடைபெறும் காங்கிரஸ் போராட்டத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டறை திறப்பு- 20 பேர் நியமனம்

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்த மாதம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். இந்த போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், போராட்ட நிலவரங்களை சேகரிக்கவும் சென்னை சத்திய மூர்த்தி பவனில் கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டறையில் காலை முதல் மதியம் வரை ஒரு குழுவும், மதியம் முதல் மாலை வரை ஒரு குழுவும் பணியில் இருக்கும். இதற்கான குழுவையும் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளராக செந்தமிழ் அரசு உறுப்பினர்களாக சுமதி அன்பரசு, அகரம் கோபி, சுரேஷ் பாபு, தனராஜ், கடல் தமிழ் வாணன், அன்பழகன், மஞ்சுளா, அசன் ஷேக், விஜய்சேகர், சுமதி, கார்த்தி கேயன், ரஞ்சித்குமார், சொல்வேந்தன், ராஜேஷ், மலர்க்கொடி, சரளா உள்பட 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News