Loading . . .




கோலாரில் இன்று நடக்க இருந்த ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்த கோலாரில் நீதிகேட்டு 'மகாத்மா காந்தியின் வாய்மையே வெல்லும்' என்ற பெயரில் கடந்த 5-ந்தேதி பொதுக்கூட்டம் நடத்த கர்நாடக காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. மேலும் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ராகுல் காந்தியின் முதல்கூட்டமாகவும் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக அந்த பொதுக்கூட்டம் ஏப்ரல் 5ம் தேதியில் இருந்து 6ம் தேதிக்கும், பின்னர் 9ம் தேதிக்கும், தொடர்ந்து 10ம் தேதிக்கும் மாற்றப்பட்டு இருந்தது. ஆனால் 9ம் தேதி (இன்று) பிரதமர் மோடி புலிகள் காப்பகத்திற்கு வருகை தருகிறார். இதனால் இன்று கோலாரில் நடக்க இருந்த ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் தேதி 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது வருகிற 16ம் தேதி அந்த பொதுக்கூட்டம் நடத்தப்பட இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News