Loading . . .




வளர்ந்த இந்தியாவின் தேவைகளை கருதி புதிய தேசிய கல்வி கொள்கை: பிரதமர் மோடி பேச்சு

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

நவீன மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய தேசிய கல்வி கொள்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தியுள்ளது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றியதாவது: நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவின் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய தேசிய கல்விக்கொள்கையை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி, அறிவு, திறன், கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு மத்தியப்பிரதேசத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்களுக்கான ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 60,000 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதனால், மத்தியப் பிரதேசத்தில் கல்வியின் தரம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. ஒருவருடைய வாழ்வில் தாய், ஆசிரியரை போன்று மாணவர்களின் மனதில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும். உங்களுடைய கல்வி நாட்டின் நிகழ்காலத்தை உருவாக்குவதோடு மட்டுமின்றி வருங்காலத்தை வளமாக்கும் நோக்கில் அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News