Loading . . .




ஆளுநர்களின் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

ஆளுநர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அனைத்து எதிர்க்கட்சி முதல்வர்களும் சந்திக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேற்று தொலைபேசியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாஜக இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிரான முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினார்.

மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க அனைத்து கட்சி முதல்வர்களும் சந்திக்க வேண்டும் என்றார்’’ என தெரிவித்துள்ளார்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News