Loading . . .




மோசடி நிதி நிறுவன சொத்துக்கள் முடக்கப்படுமா?: அரசு மவுனம் தமிழகம் முழுதும் 2.96 கோடி பேரிடம், 13 ஆயிரத்து 861 கோடி ரூபாயை, 300 போலி நிதி நிறுவனங்கள் சுருட்டி உள்ளன.

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

நிதி நிறுவனங்களை நடத்தியவர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்ட நிலையில், யாரிடம் இருந்து எப்படி பணத்தை திரும்ப பெற்று, ஏமாற்றப்பட்ட மக்களுக்கு கொடுப்பது என புரியாமல், பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் தவிக்கின்றனர். இதில், 'ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்., எல்பின், அம்ரோ கின்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கியமானவை. பணத்தை இழந்த மக்கள், பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் செய்துள்ளனர்.

சிறு தொழில் அதிபர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என, எல்லா தரப்பு மக்களும், ஆருத்ரா உள்ளிட்ட போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்

இப்போது மொத்தமாக பணத்தை இழந்து விட்டோம். சில போலீசார், போலி நிதி நிறுவன அதிபர்களிடம் இருந்து பணம் வாங்கி கொண்டு அவர்களை தப்ப விடும் காரியத்தை செய்துள்ளனர். இது ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

போலி நிறுவனங்கள் செயல்பாட்டையும், புதிய நிறுவனங்கள் துவங்குவதையும், அரசால் முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்த விஷயங்கள் மீது, அரசு தரப்பு செலுத்தும் குறைந்த கவனமே இதற்கு காரணம்.


ஒருவர் 10 கோடி ரூபாய் வாங்கி ஏமாற்றினாலும், சிறை தண்டனையோடு, 10 ஆயிரம் ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படுகிறது. பொது மக்கள் இழந்த பணத்தை, மோசடி ஆசாமிகளிடம் இருந்து வசூலித்து, ஏமாந்தவர்களுக்கு முறையாக திருப்பி அளிக்க, நல்ல வழிமுறை இல்லாமல் இருந்தது.


தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி, வழக்கு போட்டு வந்தனர். இந்த சட்டத்தின் படி, போலி நிறுவனங்கள் பதுக்கிய பணம், சொத்துக்களை மீட்க, சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.


வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர், இதன் சிறப்பு அதிகாரியாக இருந்து செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது. பின், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட வருவாய் அதிகாரியே, சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என, அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முறையில்லாத முதலீட்டு திட்டங்கள் தடுப்பு சட்டம் என்ற சிறப்பு சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சிறப்பு சட்டம் வாயிலாக, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடி நபர்களை கைது செய்து, வழக்கு நடத்தினாலும், ஒரு சிக்கல் உள்ளது.


புதிய சிறப்பு சட்டம் செயல்பாட்டுக்கு வந்து விட்டாலும், தமிழகத்தில் போலி நிதி நிறுவனங்கள் பதுக்கிய சொத்துக்களை, பணத்தை பறிமுதல் செய்ய, சிறப்பு அதிகாரி நியமிக்கப்படவில்லை. அதனால், சொத்துக்களை மீட்க முடியவில்லை.


இதை சுட்டிக்காட்டி, போலி நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள், கோர்ட்டில் வாதாட போகின்றனர். ஒரு சிலர், இதையே வாதமாக வைத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்று உள்ளனர்.


பொருளாதார குற்றப் பிரிவு போலீசார், குவியும் புகார்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்பது புரியாமல் தடுமாறுகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் முழுமையாக அரசியல் புகுந்து விட்டது. ஆட்சியில் இருப்பவர்களே, போலி நிதி நிறுவன அதிபர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளனர். அத்துடன், போலீசார் இதுபோன்ற வழக்குகளை, பணம் காய்ச்சி மரமாக பார்க்கும் போக்கும் அதிகரித்துள்ளது.


எனவே, அரசு உடனடியாக, சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் புதிய சட்டத்தின்படி, பொருளாதார குற்றங்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டு விட்டது. அதேபோல, தமிழக அரசும் தீவிரமாக இயங்காவிடில், முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைப்பது குதிரை கொம்பு தான். இவ்வாறு அவர் கூறினார்முறையற்ற முதலீட்டு திட்டங்கள் தடுப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தின் கீழ் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முறையாக பயன்படுத்துவதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள், ஒவ்வொன்றாக சரி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்ஐ.எப்.எஸ்., என்ற நிதி நிறுவன அதிபர்களை, வழக்கில் இருந்து தப்ப வைப்பதற்காக, பொருளாதார குற்றப் பிரிவு டி.எஸ்.பி., கபிலன், லஞ்சமாக, 5 கோடி ரூபாய் பேசி, அதில், முதல் கட்டமாக, 32 லட்சம் ரூபாயை பெற்றிருக்கிறார் என்று முதலில் தகவல் வந்தது. அந்த அதிகாரியும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தற்போது, அந்த அதிகாரி 5 கோடி ரூபாயை முழுமையாக பெற்று விட்டார் என, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறுகின்றனர்

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News