Loading . . .




கர்நாடகாவில் இன்று பதவியேற்பு விழா- மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 5 நாளாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதையடுத்து, பெங்களூருவில் இன்று 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பிதழ் அனுப்பினார். இந்நிலையில், இந்த விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ககோலி கோஷ் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News