புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் கிடைத்த பணத்தை ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியதாக எதிர்கட்சிகள் அளித்த புகாரின் பேரில் சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரைத்தார்.அதன்பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத் துறையும் பதிவு செய்து விசாரித்து வந்தது.இந்நிலையில், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் உடன் தொடர்புடையவர்கள் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது. “தனது இரண்டு நண்பர்களும் அமலாக்க துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்,” என அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்
0 Comments