Loading . . .




தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை

The Forecast 2 years ago தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் காவல் நிலையத்தில் வரும் புகார்களுக்கு உடனடியாக வழக்கு பதிவும் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் கடந்த 04.06.2022-ம் தேதி POCSO சட்டத்தின்கீழ் பதிவு செய்த வழக்கில் குற்றவாளி இராஜேந்திரன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, இவ்வழக்கின் புலன்விசாரணை முடித்து எதிரி மீது குற்றப்பத்திரிக்கை 23.06.2022-ல் POCSO நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் நாச்சியார்கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ரேகாராணி அவர்களால் புலன்விசாரணை செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை முடித்து, இன்று (24.05.2023) POCSO நீதிமன்றத்தால் இவ்வழக்கின் எதிரிக்கு 6 of POCSO Act-ன் கீழ் ஆயுள் சிறை தண்டனையும் மற்றும் ரூ. 20,000/- அபராத தொகையும் மற்றும் இ.த.ச 506 (i)-ன் கீழ் 2 வருட சிறை தண்டனையும் மற்றும் ரூ. 5,000/- அபராத தொகையும் விதித்து தஞ்சாவூர் POCSO நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

0 Comments

Post your comment here

தஞ்சாவூர் Relateted News