Loading . . .




தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை குறைத்தது ஏன்?..ஒடிசா ரயில் விபத்தில் திசை திருப்பவே சிபிஐ விசாரணையா?: காங். தலைவர் கார்கே சரமாரி கேள்வி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை குறைத்தது ஏன்? ரயில் ஓட்டுநர்களின் காலிப்பணியிடங்களை மோடி அரசு நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.பிரதமர் மோடிக்கு சரமாரி கேள்வி: ரயில்வேயில் 9 ஆண்டுகளாக 3 லட்சம் காலிப்பணி இடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்? என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.1990களில் 18 லட்சமாக இருந்த ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை 12 லட்சமாக குறைத்தது ஏன்? பணியில் உள்ள ரயில்வே ஊழியர்களில் 3.18 லட்சம் பேரை ஒப்பந்த ஊழியராக வைத்திருப்பது ஏன் என்றும் காங். தலைவர் கார்கே, பிரதமர் மோடிக்கு கேள்வி குறிப்பிட்ட பணி நேரத்துக்கு அதிகமாக ரயில் ஓட்டுநர்களை பணிபுரிய கட்டாயப்படுத்துவது ஏன்? ரயில் ஓட்டுநர்களின் சுமையை அதிகரிப்பது விபத்துக்கு வழிவகுக்கும் என்பது தெரியாதா? ரயில் ஓட்டுநர்களின் காலிப்பணியிடங்களை மோடி அரசு நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்?ரயில்வே பாதுகாப்பு ஆணைய பரிந்துரையை அலட்சியப்படுத்தியது ஏன்? கார்கே கேள்வி மைசூர் அருகே கடந்த பிப்.8-ம் தேதி ரயில் விபத்து ஏற்பட்டது. விபத்தை அடுத்து தென்மேற்கு மண்டல ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் விடுத்த எச்சரிக்கையை ரயில்வே அலட்சியப்படுத்தியது ஏன்? தென்மேற்கு மண்டல ரயில்வே அதிகாரி சிக்னல் கட்டமைப்பில் கோளாறு உள்ளது பற்றி எச்சரித்த பிறகும் ரயில்வே செயலற்று இருந்தது ஏன்?

ரயில்வே பாதுகாப்பு ஆணைய பரிந்துரைகளை அலட்சியப்படுத்தியதற்காக ரயில்வே துறையை நாடாளுமன்ற நிலைக்குழு கண்டித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை பலப்படுத்தாதது ஏன்? ரயில்வே பாதுகாப்பு ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்காதது ஏன்?2017-18-லிருந்து 2020-21 21 வரையான ஆண்டுகளில் நடந்த 10 விபத்துகளில் 7 விபத்துகள் தடம் புரண்ட நிகழ்வுகளாகும். 2017-ல் இருந்து 2021 வரை கிழக்குக் கடலோர ரயில்வேயில் தண்டவாளப் பராமரிப்பு மேற்கொள்ளாதது ஏன்? இந்திய தலைமைக் கணக்கு அதிகாரி சுட்டிக்காட்டிய பிறகும் தண்டவாளப் பராமரிப்பு மேற்கொள்ளப்படாதது ஏன்?தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை குறைத்தது ஏன்?: கார்கே கேள்வி* தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை 79 சதவீதம் குறைத்தது ஏன்? என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். தண்டவாளங்களை புதிதாக மாற்ற ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதே, அந்த நிதி ஒதுக்கப்படாதது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ரயில் மோதல் தடுப்பு திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ரக்ஷா கவாச் என்ற திட்டத்தை கவாச் என்று பெயர் மாற்றிய மோடி அரசு, 4% தடங்களில் மட்டுமே செயல்படுத்தி இருப்பது ஏன்? என்று சாடியுள்ளார்.ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் சேர்த்தது ஏன்?: கார்கே கேள்வி 2017-18ம் ஆண்டிலிருந்து ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் சேர்த்தது ஏன்?தனியே தாக்கல் செய்யப்பட்டுவந்த ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் சேர்த்ததால் ரயில் திட்டங்களை செயல்படுத்துவது பாதிக்கப்பட்டது. ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்துடன்தான் தனி ரயில்வே பட்ஜெட் முறை கைவிடப்பட்டதா? அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையே ரயில்களை இயக்குவதை தனியாரிடம் அரசு ஒப்படைத்தது ஏன்? பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டுவந்த சலுகைகளை ரத்து செய்தது ஏன்?

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவது பிரச்சனையை திசை திருப்புவதற்காகவா என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். 2016-ல் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கான்பூர் ரயில் விபத்தில் சதி நடந்திருப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். 2 ஆண்டுகள் விசாரணை நடத்திய என்ஐஏ ரயில் விபத்து தொடர்பாக குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யாமல் வழக்கை கைவிட்டது. கான்பூர் ரயில் விபத்து தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தியது போலவே தற்போது சிபிஐ விசாரணை நடத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடிக்கு 11 கேள்விகளை கேட்டு கார்கே கடிதம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதன் மூலம் ரயில் பாதுகாப்பு விவகாரத்தை நிர்வாக ரீதியாக அணுக ஒன்றிய அரசு தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது. விபத்துக்கு காரணமானவர்களை தண்டிக்காமல் திசை திருப்பும் உத்தியை ஒன்றிய அரசு கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். விபத்துக்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சர் அறிவித்தபிறகு சிபிஐ விசாரணை நடத்துவது ஏன்? சிபிஐ அமைப்பு, குற்றங்களை விசாரிக்கவே இருப்பது, ரயில் விபத்துகளை விசாரிப்பதற்காக இருக்கும் அமைப்பு சிபிஐ அல்ல. சட்டம்-ஒழுங்கு தொடர்பான விசாரணை அமைப்புகள் தொழில்நுட்பம், நிர்வாகம், அரசியல் ரீதியான தோல்விகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க முடியாது. சிபிஐ-யில் ரயில்வே பாதுகாப்பு, சிக்னல் பராமரிப்பு சார்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் இல்லை. ரயில்வே நிர்வாகத்தில் பிரச்சனை உள்ளதை பிரதமரும் ரயில்வே அமைச்சரும் ஒப்புக்கொள்ள மறுப்பதாக கார்கே குற்றம்சாட்டியுள்ளார்

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News