நாடு முழுவதும் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு: ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்
The Forecast 3 years ago தேசிய செய்திகள்
ரயில் நிலையங்களில் அமைந்துள்ள ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகள், லெவல் கிராசிங்களுக்கான தொலைத்தொடர்பு சாதனங்கள், சிக்னல் அமைப்புகள் அடங்கிய ரிலே அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையைப் பின்பற்றுமாறு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஒடிஸாவின் பாலசோரில் 3 ரயில்கள் தடம்புரண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. சிக்னல் வழங்குவதில் ஏற்பட்ட 'குறுக்கீட்டால்' லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் விரைவு ரயில் மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கு பாஹாநகா பஜார் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள ரிலே அறையை எளிதாக அணுக முடிந்ததே முக்கிய காரணம் என கருதப்படுகிறது. ரிலே அறையின் பூட்டில் 'மோசடி' நடந்திருப்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் பாதுகாப்பை உறுதிபடுத்துவதே தற்போதைய முக்கியப் பணி என ரயில்வே மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறைகளுக்குத் தனியே யாரும் செல்ல முடியாததை இரட்டைப் பூட்டு முறை உறுதிபடுத்தும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ரயில் நிலையங்களுக்கு , ரிலே அறைச் சாவியைப் பயன்படுத்துவது போலவே ரிலே சிக்னல் அமைப்பில் பணிகளை அருகில் உள்ள லெவல் கிராசிங்களுக்கான தொலைத்தொடர்பு சாதனங்கள்சிக்னல் அமைப்புகள் அமைந்துள்ள 'ரிலே' குடில் அறைக்கு இரட்டைப் பூட்டு முறையைப் பின்பற்ற வேண்டும். புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தும் வரை தற்போதுள்ள ஒற்றைப் பூட்டின் சாவியை ரயில் நிலைய மேலாளர் நிர்வகிக்க வேண்டும். குடில் அறையின் சாவியையும் ரயில் நிலைய மேலாளர் நிர்வகிக்கும் பதிவேட்டில் முறையான பதிவுகள் செய்து பயன்படுத்த வேண்டும். பராமரிப்புப் பணிகளுக்காக சாவியைக் கையாளும்போதும் முறையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடங்கும்போதும். முடிக்கும்போதும் முறையான குறிப்பாணையை(மெமோ) ரயில் நிலையை மேலாளரிடம் தொழில்நுட்ப வல்லுநர் வழங்கியிருக்க வேண்டும். இதை அவர் செய்யத் தவறியதும் கோரமண்டல் விரைவு ரயிலுக்கு பச்சை சிக்னல் கிடைக்க காரணமாக அமைந்துள்ளது. சிக்னல் அமைப்புகளில் செய்யப்படும் பராமரிப்பு, பழுது நீக்குதல் பணிகளில் பின்பற்ற வேண்டிய துண்டிப்பு, மறுஇணைப்பு மெமோ தொடர்பான நெறிமுறைகள் தற்போதைய உத்தரவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைத் தொடங்கியதிலிருந்து சிக்னல் அமைப்பின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 3ஆவது உத்தரவை இந்திய ரயில்வே துறையின் உயரிய நிர்வாக அமைப்பான ரயில்வே வாரியம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments