சென்னையில் உள்ள தனது இல்லத்தில், சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை
அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
செந்தில்பாலாஜி முக்கிய துறைகளின் அமைச்சராக இருப்பதால், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனையில்
ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது
செய்துள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்று
வருவது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் செந்தில் பாலாஜியின்வீடு, தலைமைச் செயலக அறை உள்பட 11 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவையும் கடந்து நீடித்த சோதனையின் முடிவில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செல்லும் செந்தில் பாலாஜி கூறினார்.
வழியில், உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் இதையடுத்து அவரை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அமலாக்கத்
ஓமந்தூரார் அரசு துறை அதிகாரிகள் சேர்த்தனர். இதனிடையே தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்
பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
இருப்பினும் அவர் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
0 Comments