திருவாரூரில் ஜூன் 20-இல்கலைஞர் கோட்டத்தைத் திறக்கிறார் பிகார் முதல்வர் நிதிஷ்குமார்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஜூன் 20-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அதை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்.
இதேபோல், அங்கு அமைக்கப்பட்டுள்ள முத்துவேலர் நூலகத்தை பிகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கவுள்ளார்.
கலைஞர் கோட்டத் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை, பிகார் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரிடம் திமுக துணைப் பொதுச் செயலர் ஆ.ராசா, புதன்கிழமை நேரில் வழங்கினார்.
கலைஞர் கோட்டமானது திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைக்கப்பட்டுள்ளது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள அதன் திறப்பு விழா முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
0 Comments