Loading . . .




80 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ஒப்பந்தம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

படுக்கை வசதி கொண்ட 80 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க டிடாகர் ரயில் சிஸ்டம்ஸ் (டிஆர்எஸ்எல்) மற்றும் அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஎச்இஎல்) இணைந்த கூட்டு நிறுவனத்துடன் ரயில்வே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ரூ.24,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்படி, 2029-ஆம் ஆண்டுக்குள் 80 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று கூட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கூட்டு நிறுவனம் ஒன்றுக்கு இவ்வளவு பெரிய மதிப்பிலான ஒப்பந்தத்தை, ரயில்வே வழங்குவது இது முதல்முறையாகும். வடிவமைப்பு, தயாரிப்பு மட்டுமன்றி ரயில்களின் 35 ஆண்டுகளுக்கான பராமரிப்பும் ஒப்பந்தத்தில் அடங்கும்.

'பிரதமர் நரேந்திர மோடியின்

தற்சார்பு இந்தியா தொலைநோக்கு பார்வை மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் பங்கேற்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறோம். எங்களது தயாரிப்பிலான முதல் ரயிலை, இரண்டு ஆண்டுகளுக்குள் தயாரித்து ஒப்படைப்போம். ஒவ்வொரு ரயிலிலும் 16 பெட்டிகள் இருக்கும்; மொத்தம் 887 பேர் வரை பயணிக்கலாம். மணிக்கு 160 கி.மீ. வரை செல்லும் வகையில் இந்த ரயில்கள் வடிவமைக்கப்படும்.

இந்த ரயில்களின் இறுதிகட்ட இணைப்பு, பரிசோதனை ஆகியவை சென்னையில் உள்ள ரயில்வே ஆலையில் மேற்கொள்ளப்படும்' என்று டிஆர்எஸ்எல்-பிஎச்இஎல் கூட்டு நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2024-25ஆம் ஆண்டுக்குள் 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க கடந்த 2021-22 மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News