Loading . . .




துறைமுகம், விமான நிலையம் மட்டுமின்றி ரயில்வே துறையிலும் கால்பதிக்கும் அதானி?.. முன்பதிவு டிக்கெட் தளத்தை கையகப்படுத்துகிறது

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

துறைமுகம், விமான நிலையம் மட்டுமின்றி ரயில்வே துறையிலும் அதானி குழுமம் கால்பதிக்க உள்ளதாகவும், ரயில்வே டிக்கெட் முன்பதிவு தளத்தை கையகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி குழுமமானது, நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை கையாண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், ரயில்வே துறையில் கால் பதிக்கவுள்ளது. அதாவது ஆன்லைன் ரயில்வே டிக்கெட் முன்பதிவு சேவையை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி-யானது, ரயில்வே டிக்கெட் முன்பதிவின் ‘டிரெயின்மேன்’ என்ற பெயரில் இயக்கி வருகிறது.அதானி குழுமம் ஸ்டார்க் எண்டர்பிரைசஸ் நிறுவனம், ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான ட்ரெயின்மேன் தளத்தை இயக்குவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் டிரெயின்மேன் தளமானது., அதானி டிஜிட்டல் ஆய்வகத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இது அதானி எண்டர்பிரைசஸின் துணை நிறுவனமாகும். இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. அதானி ‘டிஜிட்டல் லேப்’ என்பது அதானி குழுமத்தின் எதிர்கால வணிகத் திட்டமாகும். இந்த ஆய்வகத்தில்,ஆப் டிசைனிங், யூசர் இன்டர்ஃபேஸ் டிசைனிங், எஸ்சிஓ, ரிசர்ச் மற்றும் அனாலிசிஸ் போன்ற பணிகள் நடத்தப்படும். மேலும் இந்த ஆய்வக நிறுவனத்தில் ‘அதானி ஒன்’ சூப்பர் செயலிக்கான பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News