Loading . . .




வங்கி கணக்கு எண்ணுக்கு பதிலாக விருப்பப் பெயர்: ஐஓபி புதுமை

The Forecast 3 years ago தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் கணக்கு எண்களுக்கு (அக்கவுன்ட் நம்பர்) பதிலாக, அவர்கள் விரும்பும் பெயரைப் பயன்படுத்தும் புதுமையான திட்டத்தை பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

'என் கணக்கு, எனது பெயர்' (மை அக்கவுன்ட், மை நேம்) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் தேர்வு செய்யும் பெயரைப் பயன்படுத்தியே பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பவோ, பிறரிடமிருந்து பணம் பெறவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வங்கித் துறையில் முதல்முறையாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய முறையில், வாடிக்கையாளர்களால் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள முடியும்; அவர்களது கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்று வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News