இந்திய உளவு அமைப்பான 'ரா'வுக்கு புதிய செயலாளரை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தியாவின் முக்கியமான உளவு அமைப்பு ரா. இதன் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவியாக செயலாளர் பதவி இருக்கிறது. இதில் சமந்த் குர்னார் கோயல் தற்போது பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக் காலம் வரும் ஜூன் 30-ம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. இந்தநிலையில் புதிய செயலாளராக ரவி சின்ஹாவை நியமித்து மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
0 Comments