Loading . . .




குட்கா முறைகேடு வழக்கில் 10வது முறையாக சிபிஐ வாய்தா: மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் தகவல்

The Forecast 3 years ago அரசியல் செய்திகள்

தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கபட்ட நிலையில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் குடுத்து குட்கா விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் வரியெய்பு ந்டைபெறுவதாகவும் வந்த தகவலின் அடிபடையில் கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக வைத்திருந்த டைரியும் பறிமுதல் செய்தனர்.மேலும் அந்த டைரியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கபட்டதாக குறிபிடபட்டிருந்தது. அந்த சர்ச்சையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னள் வணிகவரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 11 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடபட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ வழக்கு பதிவு செய்தும், அந்த கிடங்கின் உரிமையளர்களான மாதவராவ், சீனிவாச ராவ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து அவர்கள் மீது 2021-ல் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.முன்னள் அமைசர்கள் மற்றும் மத்திய, மாநில உயர்அதிகாரிகள் பெயர் அந்த குற்றபத்திரிக்கையில் இடம்பெறாததால், கூடுதலாக குற்றபத்திரிக்கை தக்கல் செய்ய சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னள்அமைசர்கள் மற்றும் மத்திய, மாநில உயர்அதிகாரிகள் பெயர் அந்த குற்றபத்திரிக்கையில் இடம்பெறாததால், கூடுதலாக குற்றபத்திரிக்கை தக்கல் செய்ய சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னள் வணிகவரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேரின் பெயர்கள் அந்த குற்றபத்திரிக்கையில் இடம்பெறவில்லை.அவர்கள் மீது குற்றபத்திரிக்கை தக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை 17-ம் தேதி அனுமதி வழங்கியது. இதனை அடுத்து டெல்லி சிபிஐ தரப்பில் தக்கல் செய்யபட்ட குற்றபத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதாகவும், தவறுகளை திருத்தம் செய்து வழக்கில் கைது செய்யபட்டவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் எனவும், குற்றம் சாட்டபட்டவர்களுக்கு அதிராக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை குறித்த தகவல்கள் இல்லை என்றும், குற்றபத்திரிக்கையில் உள்ள தவறுகளை முழுமையாக திருத்தி கூடுதல் குற்றபத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்தநிலையில் கடந்த ஏப்ரல் முதல் ஒவ்வொரு முறையும், இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஒவ்வொருமுறையும் தவறுகள் திருத்தவில்லை என்றும், விசாரணைக்கு அனுமதி வாங்கவில்லை என்றும் கூறி இதுவரை 10 வாய்தாக்களுக்கு மேல் பெறபட்டுள்ளது.தொடர்நது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது சிபிஐ வழக்கில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்தது. இதனை அடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது. மத்திய அரசின் அனுமதி கிடைக்காத ஒரே காரணத்திற்காக மட்டுமே இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

0 Comments

Post your comment here

அரசியல் செய்திகள் Relateted News