தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்டம் மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 08.11.2020-ம் தேதி, சட்டத்திற்கு புறம்பாக போதைப்பொருளான கஞ்சாவினை விற்பனை செய்த தஞ்சாவூர் புண்ணியமூர்த்தி தோட்டம், வடக்கு வாசல் பகுதியைச் சின்னையன் என்பவர் மீது பதிவு செய்த வழக்கில் குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, இவ்வழக்கில் புலன்விசாரணை முடித்து எதிரிமீது குற்றப்பத்திரிக்கை 19.08.2021-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் சந்திரமோகன் அவர்களால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சந்திரா அவர்களால் புலன்விசாரணை முடிக்கப்பட்டு, நீதிமன்ற காவலர் அந்தோணிசாமி அவர்கள் திறம்பட பணியாற்றியதில் இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை முடித்து, இன்று 28.06.2023-ம் தேதி இவ்வழக்கின் எதிரி சின்யைனுக்கு 05 வருடம் கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 20,000/- அபராத தொகையும் விதித்து தஞ்சாவூர் மாவட்ட POCSO நீதிமன்ற நீதிபதி மற்றும் அத்தியாவசிய பொருட்கள், சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி திரு. சுந்தர்ராஜன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments