Loading . . .




எரிவாயு விலை திடீர் அதிகரிப்பு

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.8 அதிகரித்து, சனிக்கிழமை முதல் (ஜூலை 1) ரூ.1,945-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வது வாடிக்கையாக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இந்த மாதம் சற்று அதிகரித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் சனிக்கிழமை வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ரூ.8 அதிகரித்து, ரூ.1,945-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மே மாதம் வணிகப்  பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.171 குறைக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் ரூ.84.50 குறைக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் ரூ.8 அதிகரித்துள்ளது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News