Loading . . .




2047-இல் நாட்டிலுள்ள பட்டய கணக்காளர்களில் 50% பேர் பெண்கள்: குடியரசுத் தலைவர் முர்மு நம்பிக்கை

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

2047-ஆம் ஆண்டு இந்தியா100-ஆவது சுதந்திர தினத்தைகொண்டாடும்போது, நாட்டிலுள்ள பட்டயக் கணக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள் என்று நம்புவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ஐசிஏஐ) பட்டயக் கணக்காளர்களின் தலைமைஅமைப்பாக உள்ளது. இந்நிலையில், தில்லியில் ஐசிஏஐயின் 75-ஆவது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு பேசியதாவது:

பட்டயக் கணக்கு (சிஏ) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 42 சதவீதம் பேர் பெண்கள் என்றும், அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் என்னிடம் கூறப்பட்டது.

2047-ஆம் ஆண்டு இந்தியா 100-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, நாட்டிலுள்ள பட்டயக் கணக்காளர்களில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்

வணிகத் துறையின் வலுவான தூண்களில் ஒன்றாக பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல நிர்வாகத்துக்கு வலுசேர்க்கின்றனர். பொருளாதாரத்தின்

உண்மையான ஆரோக்கியத்தை  பிரதிபலிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.

ஊரகப் பகுதிகளில் சேமிப்புக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டப்பட்டு ஏழைகளும், அப்பாவி மக்களும் ஏமாற்றப்படுகின்றன.

இந்நிலையில், பெண்களுக்காக 'நிதி மற்றும் வரிக் கல்வியறிவு'

பிரசாரத்தை ஐசிஏஐ தொடங்கியுள்ளது. இந்த பிரசாரம் ஊரக பகுதிகளுக்கு, குறிப்பாக பழங்குடியினர்

வசிக்கும் பகுதிகளுக்கு மிகுந்த. பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பிரசாரம் சேமிப்புக்கு அதிக வட்டி தருவதாக கூறி செய்யப்படுவது போன்ற மோசடிகளில் இருந்து மக்களைக் காப்பாற்றும் என்றார் அவர்.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News