தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் காவல் நிலையத்தில் வரும் புகார்களுக்கு உடனடியாக வழக்கு பதிவும் செய்து நடவடிக்கை வல்லம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வல்லம் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 30.01.2019-ம் தேதி POCSO சட்டத்தின்கீழ் பதிவு செய்த வழக்கில் குற்றவாளி மகேஸ்வரன் என்பவரை நீதிமன்ற செய்து காவலுக்கு உட்படுத்தி, இவ்வழக்கின் புலன்விசாரணை முடித்து எதிரி மீது குற்றப்பத்திரிக்கை 19.08.2019-ல் POCSO நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் . கலைவாணி மற்றும் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் . ஜெயந்தி அவர்களால் புலன்விசாரணை செய்யப்பட்டு இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டு, இன்று (03.07.2023) POCSO நீதிமன்றத்தால் இவ்வழக்கின் எதிரிக்கு 10 வருட சிறை தண்டனையும் மற்றும் ரூ.20,000/- அபராத தொகையும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ. 2,00,000/- (இரண்டு இலட்சம்) அரசு தரப்பிடமிருந்து வழங்கிடவும் தஞ்சாவூர் POCSO நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments