சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 6 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வரை 6வழி பசுமைச்சாலை அமைகிறது. சத்தீஸ்கர் – ஆந்திராவை இணைக்கும் இந்த 6 வழி பசுமைச்சானை திட்டத்தின் மதிப்பீடு 13,750 கோடியாகும். சத்தீஸ்கரின் உதாந்தி வனச்சரணாலயம் வழியாக 2.8 கி.மீ தூரம் வரை ஆறு வழி பசுமை சாலை கட்டப்படுகிறது. விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் 2.8 கி.மீ. தூரம் வை 27 இடங்களில் சுரங்கப்பாதை அமைகிறது. 6வழிச் சாலையை கடக்க குரங்குகளுக்கு 17 இடங்களில் மரத்திலான சிறிய வகை பாலம் அமைக்கப்படுகிறதுபிரதமர் நரேந்திர மோடி, இன்று சத்தீஸ்கர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடி, நிறைவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு உள்ளது. இதனையடுத்து, ஏற்கனவே தொடங்கப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து முடித்து தொடங்கி வைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது.
ஏற்கனவே தொடங்கப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து முடித்து தொடங்கி வைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது.குறிப்பாக, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிரதமர் மோடி ரூ.7,600 கோடி மதிப்பிலான 10 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், ஜபல்பூர் – ஜக்தல்பூர் தேசிய நெடுஞ்சாலை உடன் ராய்ப்பூரை இணைக்கும் 33 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட 4 வழிச்சாலை மற்றும் NH-130-இன் பிலாஸ்பூர் மற்றும் அம்பிகாபூர் இடையே 4 வழிச்சாலை, பிலாஸ்பூர் – பத்ரதலி சாலை உள்ளிட்ட ஐந்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளார்.NH-130-இல் 6 லைன் கிரீன்ஃபீல்ட் ராய்ப்பூர் – விசாகப்பட்டினம் வழித்தடத்தில், 6 வழிச்சாலை 43 கிலோ மீட்டர் தொலைவிலான ஜாங்கி – சர்கி பிரிவு, 6 வழிச்சாலை 57 கிலோ மீட்டர் தொலைவிலான சர்கி – பசன்வாஹி பிரிவு மற்றும் 6 வழிச்சாலை 25 கிலோ மீட்டர் தொலைவிலான பசன்வாஹி – மரங்புரி பிரிவு என மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
துறைமுகங்களில் இருந்து
இருந்து நிலக்கரி, எஃகு, உரங்கள் மற்றும் பிற பொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக, ரூ.750 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 103 கிலோ மீட்டர் தொலைவிலான ராய்ப்பூர் – காரியார் ரயில் பாதை இரட்டிப்புப் பாதையை பிரதமர் மோடி, நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். பின்னர் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு கீதா பிரஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பின், தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்லும் பிரதமர் மோடி, கோரக்பூர் – லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜோத்பூர் – சபர்மதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார்.பிரதமர் மோடி இன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் ரூ.7600 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் வழித்தடத்தின் ஆறு வழி பாதை உள்பட பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, நிறைவு பெற்ற சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதன் பிறகு உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கும், வாரணாசிக்கும் சென்றார். தொடர்ந்து நாளை தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் செல்லும் பிரதமர் மோடி, அம்மாநிலங்களிலும் நலத்திட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கை நிறைவேற்றுவதாக கூறி, கங்கையின் மீது சத்தியம் செய்தது. ஆனால் அவர்கள் பொய் சத்தியம் செய்த பாவத்தை செய்துள்ளனர். காங்கிரஸ் அளித்த 36 வாக்குறுதிகளில் ஒன்று மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்பதுதான். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபான ஊழலை காங்கிரஸ் செய்துள்ளது. நிலக்கரி, மணல், நில மாபியாக்கள் தான் வளர்ந்துள்ளனர். மாநில முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
0 Comments