Loading . . .




உங்களுடன் ஒப்பிடும் போது ராகுல் எளிமையானவர், உண்மையானவர், மகாராஜா: அமைச்சர் சிந்தியாவுக்கு நெட்டிசன் பதிலடி

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

உங்களுடன் ஒப்பிடும் போது ராகுல் உண்மையானவர், எளிமையானவர், நேர்மையானவர் என்று ஒன்றிய அமைச்சருக்கு நெட்டிசன் பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் சென்ற ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அங்கு உணவருந்திய விடுதியின் தலைமை சமையலர் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடிய வீடியோவை டிவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் கமெண்ட் பகுதியில், ‘’ராகுல் காந்தியிடம் இருந்து கற்றுக் கொண்டது. நல்லது,’’ என்று கருத்து கூறியிருந்தார். இதற்கு சிந்தியா, ‘’உண்மையில், கற்றுக்கொள்ளவில்லை’’ என இரண்டு வார்த்தைகளில் பதிலளித்தார். இதனைப் பார்த்த நெட்டிசன், ‘’உங்கள் இருவரையும் ஒப்பிடும் போது, ராகுல் காந்தி உங்களை விட மிகவும் விவேகமானவர், எளிமையானவர், உண்மையானவர் மற்றும் நேர்மையானவர் மகாராஜா. அதனால் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதில் எந்த தீங்கும் இல்லை,’’ என்று நக்கலாக பதிலடி கொடுத்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போது ராகுலுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சிந்தியா கடந்த 2020ல் பாஜ.வில் இணைந்ததால் தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News