விரைவில் 24 மணி நேரமும் இயங்கும் காணொளி நீதிமன்றங்கள்
நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நாட்டில் 24 மணி நேரமும் செயல்படும் மெய்நிகர் நீதிமன்றங்கள் வரவிருக்கின்றன.
இந்தியாவில் புதிதாக 24 மணிநேரமும் செயல்படும் மெய்நிகர் நீதிமன்றங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதன் மூலமாக எளிதில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படும்.
நாள் முழுவதும் இயங்கும் மெய்நிகர் நீதிமன்றங்கள் மூலமாக வழக்குகளை மின்னணுமுறையில் தாக்கல் செய்து காணொளி மூலமாக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே இருந்த மெய்நிகர் நீதிமன்றங்கள் இதுவரை போக்குவரத்து தொடர்பான வழக்குகளை மேற்கொண்டு வந்தது. தற்போது புதிதாக போக்குவரத்து தவிர மற்ற வழக்குகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்ட அமைச்சகம், நீதித்துறை கல்விக்கூடங்கள், சட்டப் பல்கலைக்கழகங்கள், ஐஐஎம்எஸ் மற்றும் ஐஐடிஎஸ் ஆகியவற்றின்மூலமாக இது தொடர்பாக ஒரு விரிவான ஆய்வு மேற்கொண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெய்நிகர் நீதிமன்றங்களில் எந்த வகையான வழக்குகளை விசாரிக்கலாம் என்ற ஆய்வு மேற்கொண்டு அதற்கான புதிய பரிந்துரைகளை வழங்குமாறு சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மெய்நிகர் நீதிமன்றங்கள் மூலமாக வழக்கு மிச்சமாகும்.
மேற்கொள்பவர்களும் வழக்கறிஞர்களும் நீதிமன்றத்திற்கு வராமலே நீதியை பெற்றுக்கொள்ளலாம். இந்த நீதிபதிகள் மெய்நிகர் நீதிபதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். மெய்நிகர் நீதிமன்றங்கள் மூலமாக வழக்குகள் மேற்கொள்ளப்படுவதால் நேரம்
இந்தியாவில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 21 மெய்நிகர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.2.4 கோடி வழக்குகள் இதுவரை மெய்நிகர் நீதிமன்றங்கள் மூலமாக விசாரிக்கப்பட்டுள்ளது. 33லட்ச வழக்குகளில் மட்டும் 360 கோடி ரூபாய் அபராத தொகை பெறப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments