காவல்துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுமக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம்
The Forecast 2 years ago காவல் துறை
சென்னை மேற்கு மாவட்டம் காவல் துறையின் சார்பாக கோயம்பேடு வளசரவாக்கம் விருகம்பாக்கம் மதுராவாயல் எல்லைக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு தங்கள் குறைகளை புகார் மனுக்களாக காவல் துணை ஆணையர், காவல் துணை ஆய்வாளர்கள் காவல் உதவி ஆய்வாளர்களிடம் நேரடியாக புகார் அளித்து தீர்வு பெரும் வகையில் மாபெரும் நிகழ்ச்சி மதுராவாயல் சீதாலக்ஷ்மி திருமண மண்டபத்தில் 8.7.23 அன்று காலை சிறப்பாக நடை பெற்றது.
இதில் சென்னை கோயம்பேடு, வளசரவாக்கம், மதுராவாயல், விருகம்பாக்கம், வளசரவாக்கம் சரகம் உட்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்குபிரிவு, குற்றப்பிரிவு, மகளிர் பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டு மக்கள் குறைகளை சிறப்பான முறையில் தீர்த்து வைத்தனர். மேலும் மேற்கு மண்டல் இணை ஆணையர் மனோகர் இ.கா.ப மற்றும் , கோயம்பேடு துணை ஆணையர் குமார் , விருகம்பாக்கம் உதவி ஆணையர் சுப்பிரமணியன், கோயம்பேடு உதவி ஆணையர் S. ரமேஷ் பாபு,வளசரவாக்கம் உதவி ஆணையர் கௌதமன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இது போன்ற நிகழ்ச்சி நடைபெறுவதால் காவல்துறையினரிடம் பொதுமக்களுக்கான இணக்கம் மேம்படுகிறது மேலும் குற்ற நடவடிக்கை கனிசமாக குறைய வழி செய்கிறது.
0 Comments