காவல்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் - கூடுதல் டிஜிபி
The Forecast 2 years ago காவல் துறை
காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் அளிப்பது குறித்து கோவையில் கூடுதல் டிஜிபி அருண் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கோவை சரக காவல்துறை டிஐஜியாக பணியாற்றி வந்த சி.விஜயகுமார் நேற்றுமுன்தினம் (7-ம் தேதி) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் டிஜிபி அருண் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், கூடுதல் டிஜிபி அருண் தலைமையில், மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
0 Comments