Loading . . .




மக்களவைத் தேர்தல்: ராமநாதபுரத்திலிருந்து போட்டியிடுகிறாரா மோடி?

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

ஹைதராபாத்: பாஜக மத்திய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்பட்சத்தில், பிரதமர் நரேந்திர மோடி வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்திலிருந்து போட்டியிடலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்தியாவில் தன்னை உறுதியாக நிலைநிறுத்தும் நோக்கில், தென்னிந்திய மாநிலம் ஒன்றில் இருந்து மக்களவைத் தேர்தலில் மோடியை வேட்பாளராக நிறுத்த கட்சி முடிவு செய்ததாக கட்சியின் தலைவர் ஜேபி நட்டா பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இதுவே, பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரத்திலிருந்து போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதற்குக் காரணியாக அமைந்துவிட்டது.

மாநில பாஜக தலைவர்கள் மற்றும் தேசிய பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர்

தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமையன்று, 11 பங்கேற்ற மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றிய கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, இந்த தகவலை

தெரிவித்திருந்தார்.

அவ்வாறு தென் மாநிலத்தில் போட்டியிடுவது என்றால், எங்கே போட்டியிடலாம் என்று கூட்டத்தில்

பங்கேற்ற பிரதிநிதிகளிடம் நட்டா கேள்வி எழுப்பிய போது, பெரும்பாலானோரின் ஒருமித்த கருத்தாக இருந்தது ராமநாதபுரம்.

தற்போது, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் கே. நவாஸ் கனி எம்.பி.யாக இருக்கிறார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News