தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டம் சுவாமிமலை காவல் நிலைய பகுதியில் நேற்று 11.07.2023-ம் தேதி சுவாமிமலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் .சிவசெந்தில்குமார் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் இரவு ரோந்து பணியை மேற்கொள்ளும்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் மது அருந்திய நிலையில் கும்பகோணம் ரயில்வே பாதையின் அருகே நின்ற இருவரை விசாரணை மேற்கொள்ள முயற்சிக்கும்பொழுது சந்தேக நபர்களான இன்னம்பூர் சோழங்காந்தம் தெருவைச் சேர்ந்த ஜான்சன் மற்றும் திருவலஞ்சுழி பகுதியைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஆகிய இருவரும் தனது இரு சக்கர வாகனங்களை விட்டு தப்பித்த நிலையில், அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் சுதர்சன் கெமிக்கல்ஸ்-லிருந்து அன்னை மாதா வெடிமருந்து கடைக்கு கடத்தி செல்லப்பட்ட சுமார் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள வெடிமருந்து தயாரிப்பிற்கான பொருட்களை கைப்பற்றி, குற்றவாளிகள் இருவரையும் இன்று (12.07.2023) கைது செய்து, வழக்கு பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments