Loading . . .




உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நீதிபதிகள் உஜ்ஜால் புயான், எஸ்.வெங்கட்டநாராயண பாட்டீ ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமிக்கப்பட்டனர்.

இதற்கான அறிவிப்பை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ட்விட்டரில் வெளியிட்டார்.

தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி உஜ்ஜால் புயான், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி எஸ்.வெங்கட்டநாராயண பாட்டீ ஆகிய இருவருக்கும் பதவி உயர்வு வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த 5-ஆம் தேதி பரிந்துரைத்தது.

இவ்விரு நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக முறைப்படி பதவியேற்கும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக அதிகரிக்கும். உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் பணியிடங்கள் 34 ஆகும்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News