Loading . . .




மழைக்கால கூட்டத்தொடர்: நாடாளுமன்றத்தில் 21 மசோதா அறிமுகம்: ஒன்றிய அரசு பட்டியல்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 21 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படும் என்று ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளது.இதில் டெல்லி சேவைகள் தொடர்பான மசோதா, தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, வனப் பாதுகாப்புச் சட்டங்கள், திரைப்பட திருட்டு தடுப்பு சட்ட வரைவு, சென்சார் சான்றிதழுக்கான வயது அடிப்படையிலான வகைகளை அறிமுகப்படுத்துதல், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை அமைப்பது ஆகியவை அடங்கும். மேலும் ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதாஉள்ளிட்டவையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News