சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் சட்டம் எறும்பை கொல்ல சுத்தியலா?: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரப்புவதை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் அதிகாரம் பத்திரிகை தகவல் அலுவலகத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா உள்ளிட்டவை சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்கு நீதிபதிகள் கவுதம் படேல்,நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி கவுதம் கூறுகையில்,‘‘ புதிய சட்டத்தில் எது போலி, தவறு அல்லது தவறான நோக்கத்துடன் உள்ளது என்பதை தீர்மானிக்கும் முழு அதிகாரம் குறிப்பிட்ட துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. போலி செய்தி என்பதற்கான எல்லைகள் குறித்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை. அரசு சமர்ப்பித்த பதில் மனுவை இரண்டு முறை படித்தும் அது குறித்து தெளிவான விளக்கங்கள் உள்ளதா எதுவும் தெரியவில்லை. தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் அதிகப்படியானது. எறும்பை கொல்வதற்கு சுத்தியலை கொண்டு வந்த கதை போல்தான் உள்ளது’’ என்றார்.
0 Comments