பாஜகவின் சதியே தில்லி வெள்ளத்திற்குக் காரணம்ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
பாஜக தீட்டிய சதிதான் தேசியத் தலைநகர் தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
தில்லி ரௌஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் மாநிலங்களவை
உறுப்பினர் சஞ்சய் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தில்லியில் கடந்த 3 நாள்களாக மழை பெய்யவில்லை. பிறகு வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன? பாஜக தீட்டிய ஆழமான சதியால்தான் நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மனதில் மறைந்திருக்கும் வெறுப்பு, இப்படிப்பட்ட சம்பவங்களில் வெளிவருகிறது. ஹரியாணா மாநிலம் ஹத்தினிகுண்ட்
தடுப்பணையில் இருந்து ஹரியாணா, உத்தர பிரதேசம், தில்லி ஆகிய மூன்று வழிகளில் தண்ணீர் செல்கிறது.
ஆனால், கடந்த 9-ஆம் தேதி முதல் அனைத்து தண்ணீரும் தில்லியை நோக்கி மட்டுமே திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் ஒருவேளை சீராக திறந்துவிடப்பட்டிருந்தால், தற்போது தில்லியில் வெள்ளம் ஏற்பட்டிருக்காது. பாஜக ஏன் இப்படி செய்கிறது?. தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக எம்.பி.க்களே உள்ளனர். இந்நிலையில், தில்லியின் வழியே தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று அந்த 7 மக்களவைத் தொகுதி உறுப்பினர்களும் பிரதமர் மோடியிடம் முறையிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
5 மாநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டு பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் , பார்க்க முடியவில்லை.
நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், பாஜகவினர் மக்களின் உணர்வில் அரசியல் செய்து வருகின்றனர். தில்லியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில்முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது அமைச்சர்களுடன் களத்தில் இருக்கிறார். ஆனால், உத்தர பிரதேசம், ஹரியாணா மாநிலங்களின் முதல்வர்கள் மக்களுடன் இருக்கும் படத்தை
ஹத்னிகுண்ட் தடுப்பணையின் அனைத்து தண்ணீரும் கடந்த ஜூலை 9-13-ஆம் தேதி வரை தில்லியை நோக்கி மட்டுமே திறந்து விடப்பட்டது.அரவிந்த் கேஜரிவாலை முதல்வராக தேர்வு செய்த தில்லி மக்கள் மீது இவ்வளவு வெறுப்பா?. தற்போது அரசு நிர்வாகத்திலும், அமைச்சர்களின் பணியிலும் எந்தக் குறையும் இல்லை. ஹத்னிகுண்டின் மேற்குகிழக்கு கால்வாயில் கடந்த 9-ஆம் தேதி எவ்வளவு தண்ணீர் திறக்கப்பட்டது என்று ஹரியாணா மாநில முதல்வரிடம் கேட்டாலே அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.
தில்லி முதல்வர் கேஜரிலால் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20,000 பேர் நிவாரண முகாமுக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் சஞ்சய் சிங்.
0 Comments