ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் கடந்த 12.01.2017-ம் தேதி சாக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர், தனது மகன் சுந்தரபாண்டி அதே பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மற்றும் அன்பரசி ஆகியோருக்கு காதல் திருமணம் செய்து வைக்க உதவியாக இருந்ததால், அன்பரசியின் தந்தை அன்பழகன் மற்றும் அவரின் சகோதரர்கள் அன்புநிதி, அறிவுநிதி, அருள்நிதி மற்றும் அழகுநிதி ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து தன்னையும் தனது மகன்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கியதில் தனது மகன் சுந்தரபாண்டி இறந்துவிட்டார் என கொடுத்த புகாரின்பேரில் இ.த.ச 147, 148, 342, 294(b), 323, 302 ஆகிய சட்டபிரிவுகளின்கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்தும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியும் இவ்வழக்கில் புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை 15.03.2017-ல் கும்பகோணம் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் திரு.குமரவேல் அவர்களால் முதல் தகவல் அறிக்கை பதிவும் மற்றும் நாச்சியார்கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ரேகாராணி அவர்களால் புலன்விசாரணை செய்யப்பட்டும், நீதிமன்ற அலுவல் பெண் காவலர் திருமதி.ஜெயசுதா அவர்கள் உதவியதன் மூலம் நீதிமன்ற விசாரணை முடித்து இன்று 17.07.2023-ம் தேதி கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி.ராதிகா அவர்கள் இவ்வழக்கின் எதிரிகளான 5 பேருக்கும் இ.த.ச 302 & 149 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் 1,000/- அபராத தொகையும் மேலும் இ.த.ச 147 & 148 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் 3 வருட சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 1,000/-அபராத தொகையும், கூடுதல் தண்டனையாக வழக்கின் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது குற்றவாளிகளுக்கு இ.த.ச 323 சட்டப்பிரிவின் கீழ் 01 வருட சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 1,000/அபராத தொகையும், இரண்டாவது எதிரியான அறிவுநிதிக்கு இ.த.ச 324 சட்டப்பிரிவின் கீழ் 3 வருட சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 1,000/, வழக்கின் மூன்றாவது எதிரியான அருள்நிதிக்கு இ.த.ச 294(b) சட்டப்பிரிவின் கீழ் 06 மாத சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 250/-, விதித்து உத்தரவிட்டுள்ளார்.
0 Comments